World

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தரவு வெளியாகியுள்ளது. இது கடந்த 2019 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் 22, 207 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

மூன்றாவது இடத்தில் மத்திய பிரதேச மாநிலமும், நான்காவது இடத்தில் மேற்குவங்க மாநிலமும்,  ஐந்தாவது இடத்தில் கர்நாடக மாநிலமும், ஆறாவது இடத்தில் தெலுங்கானா மாநிலமும் உள்ளது. இதனையடுத்து கேரள மாநிலம் ஏழாவது இடத்திலும், குஜராத் மாநிலம் எட்டாவது இடத்திலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளை விட கடந்த 2021 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading