World

இந்தியாவில் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யும் பிஸ்கட் காசாவில் 2400 ரூபாய்க்கு விற்பனை!!!

5-க்கு விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் ரூ.2,400 விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரை தொடர்ந்து காசாவுக்குள் செல்லும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் 2 முதல் மே 19 வரை கிட்டத்தட்ட முழுமையான முற்றுகையை காசா எதிர்கொண்டது. மனிதாபிமானப் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்பட்டன. அவையும் கடும் சர்வதேச அழுத்தத்திற்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.

மனிதாபிமான உதவிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் பறிமுதல் செய்து ஆயுதம் ஏந்துவதாக குற்றம் சாட்டும் இஸ்ரேல், வழக்கமான ஐ.நா. உணவு விநியோகங்களை நிறுத்தியது. அதற்கு பதிலாக, மே 27-ல் சர்ச்சைக்குரிய மாற்று திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி ரஃபாவில் உள்ள எஸ்டிஎப்1 என்ற வினியோக தளம் மூலம் மனிதாபிமானப் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ரூ.5 மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் பார்லே-ஜி பிஸ்கட் காசாவில் 500 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. காசாவில் இருந்து சமீபத்தில் வைரலான ஒரு பதிவில் ஒருவர், 1.5 யூரோவிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் (ரூ.2,432) உயர்ந்த பார்லே-ஜி பிஸ்கெட்டை நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பெற்றதாக கூறுகிறார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading