Sports

இந்திய அணிக்கு பீதியை ஏற்படுத்திய வங்காள சிங்கங்கள்!

ரி20 உலக்கிண்ணப் போட்டித் தொடரின் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்தியா அணி 05 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் விராட் கோஹ்லி 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.

கேஎல் ராஹுல் 50 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஹசான் மஹ்முத் 3 விக்கெட்டுக்களையும் மற்றும் சகிப் ஹல் ஹசன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடிய நிலையில் 7 ஓவர்கள் நிறைவில் 66 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி 16 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, டக்வத் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணிக்கு 151 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய, துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஹர்சீப் பட்டேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி தனது அறையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading