இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இலங்கையில் கைது!!
இலங்கையில் கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மன்ஜோத் கல்ர
லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 தொடர் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரும், இந்தியாவின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வீரருமான மன்ஜோத் கல்ரா இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து, போட்டி ஒன்றின் முடிவை மாற்றுவதற்காக வீரர் ஒருவருக்கு 9.5 மில்லியன் ரூபாயை (சுமார் 28,700 டொலர்) லஞ்சமாகக் கொடுக்க முயன்றபோதே விளையாட்டு விசேட விசாரணைப் பிரிவினரால் (SIU) அவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட வீரர் 10 நாட்களுக்கு முன்பே அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2018 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் சதமடித்த கல்ரா, கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், திட்டமிட்டபடி எல்.பி.எல் தொடர் இன்று மாலை கொழும்பில் தொடங்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. ஊழலுக்கு எதிராகப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் SLC தெரிவித்துள்ளது. இலங்கையின் 2019 விளையாட்டு குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆட்ட நிர்ணயம் கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.