இந்திய விமானப் படை விமானம் விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு
புதுடெல்லி: அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் #உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம், #அசாமின் ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க #முயன்றபோது விபத்துக்குள்ளானது. இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் பயணித்த விமானப் படையின் ஐந்து வீரர்கள் #உயிரிழந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளும் ஆரம்பகட்ட விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

You must be logged in to post a comment.