Local

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புக்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவுசெய்து பெற்றுக் கொண்டுள்ளது.

எனவே, எவ்வித சிரமமும் இன்றி இந்த தீர்மானத்தை அமல்படுத்த முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading