EntertainmentWorld

இரண்டாவது திருமணம் செய்த கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்த மனைவி!

தன்னை விட்டு பிரிந்து 2வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கி செருப்பு மாலை அணிவித்தார். தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் காந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் காந்த்க்கு வரதட்சணையாக ₹20 லட்சம் கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பிறகு காந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர், வாரங்கல்லில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஹன்மகொண்டாவில் வசித்து வருகிறார்.

இதையறிந்த அகிலா நேற்று தனது உறவினர்களுடன் ஹன்மகொண்டா சென்று காந்த்தை ஸ்வர்ணபள்ளிக்கு  அழைத்து வந்தார். பின்னர், காந்த்தை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் செருப்பை மாலைபோல் அணிவித்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் காந்த்தை மீட்டனர். அகிலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading