World

இரத்தம் சொட்ட சொட்ட கணவனின் தலையுடன் வீதியில் சென்ற மனைவி!

கணவனின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த கொடூரம் ஆந்திராவின் ரேனிகுண்டாவில் நடைபெற்றிருக்கிறது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ரேனிகுண்டாவின் பக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அவரது மனைவி வசுந்த்ரா (50). இந்த தம்பதிக்கு 20 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருக்கிறார்.

கணவன் மனைவி இடையே அண்மைக்காலமாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இந்நிலையில் இன்று மீண்டும் இவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் போய் முடிந்திருக்கிறது.
அதன்படி ரவிச்சந்திரனின் கழுத்தை அறுத்துள்ள வசுந்த்ரா ரத்தம் சொட்ட சொட்ட கணவரின் தலையை பையில் போட்டுக் கொண்டு பொது வெளியில் சென்றிருக்கிறார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பின்னர் உடனடியாக விரைந்த போலிஸார் வசுந்த்ராவை கைது செய்திருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக வசுந்த்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading