World

இரவு நேர விடுதியில் ஒரே இரவில் 20 சிறுவர்கள் மர்ம மரணம்!

தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் உள்ள இரவு நேர விடுதியில் ஒரே இரவில் 20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் ஏராளமான கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள விடுதி ஒன்றுக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த மாணவ, மாணவியர்கள் பலர் மது அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மயங்கி கிடந்த மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 22 மாணவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 13 வயதிட்கும் உட்பட்டவர்கள் என பொலி சார் தெரிவித்துள்ளனர் .

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading