Up Country

இராகலையில் தீ விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி!

நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07.10.2021) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர்.

தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோரே இவ்வாறு தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்; ஆர்.ராமையா 55 வயது, அவரின் மனைவியான முத்துலெட்சுமி வயது 50, இவர்களின் மகள் டிவனியா வயது 35, குறித்த மகளின் பிள்ளைகள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த ஆர்.ராமையாவின் மகனான ரவீந்திரன் வயது 30 உயிர்தப்பியுள்ளார். மேற்படி மகளின் கணவர் வீட்டில் இருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இராகலை, முதலாம் பிரிவு தோட்டத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பல கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading