World

இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு!
மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை!

வரும் மே மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா உச்ச நிலைக்குப் போகும் என்று தொற்று குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் ஒரு நாளைக்கு மூன்றே கால் லட்சத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சில மாநிலங்கள் இரண்டு வாரங்கள் வரை பொது ஊரடங்கை அறிவித்திருக்கின்றன.
தமிழகம் போன்ற சில மாநிலங்கள் பட்டும்படாமலும் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றன. ஞாயிறு மட்டும் முழு முடக்கத்தை நடைமுறைப் படுத்தியிருக்கின்றன.

தற்போது மத்திய அரசு இந்திய அளவில் இரண்டு வாரங்களுக்குப் பொது முடக்கத்தை அமல்படுத்தக் கோரியிருக்கிறது.

இதில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

அதற்குள் முழு முடக்கத்தை நடைமுறைப்படுத்துவது இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவை அறிவிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும்.
தேர்தல் ஆணையமும், மாநில அரசுகளும் இணைந்து முடிவு எடுக்க வேண்டிய நேரமிது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading