Local

இறுதிவரை ஜனாதிபதிக்காக நின்றேன் என்னை ஏமாற்றிவிட்டார் மஹிந்தானந்த தெரிவிப்பு!

பல எதிர்ப்புக்கள் வந்தும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் தான் இறுதி வரை நின்றதாகவும், ஆனால் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அமைச்சரவை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இம்முறை அமைச்சரவை அமைச்சு பதவி வழங்காமையே இதற்கு பிரதான காரணமாகும் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அவர் தனக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் சிலருடன் கருத்துப்பரிமாறியுள்ளதாக கூறப்படுகிறது.

“இயற்கை உரம் என்பது கோட்டாபயவின் மகன். அதனை செய்வதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இறுதியில் நான் தான் எனது அரசியல் குறித்தும் சிந்திக்காமல் அதனை செய்வதற்கு முன்வந்தேன்.

அரச தலைவருக்காகவும் அரச தலைவரின் இயற்கை உரத்திற்காக எந்தளவு தகாத வார்த்தைகளால் மக்களிடம் திட்டு வாங்கியுள்ளேன்.

எனது உருவ பொம்மைகளை எரித்தார்கள். எனினும் இறுதி வரை அவருக்காக நின்றேன். இவ்வளவு செய்தும் அரச தலைவர் கோட்டாபய இறுதியில் ஏமாற்றி விட்டார் என அவர் புலம்பியதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading