Local

இலங்கைக்கு அருகே பூகம்பம் ஏற்படும் வாய்ப்பு புவியியலாளர்கள் எச்சரிக்கை!

இலங்கைக்கு அருகே பெரும் பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகள் புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு அருகிலுள்ள இந்திய-அவுஸ்திரேலிய பீடபூமியில் எதிர்காலத்தில் நில நடுக்கம் ஏற்படும் எனவும் சிரேஷ்ட புவியிய லாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த எச்சரிக்கையை பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, விடுத்துள்ளார். அத்துடன் இலங்கைக்குள் மட்டுமன்றி இலங்கைக்கு அருகிலும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் பேராசிரியர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலநடுக்கங்கள் பற்றிய தகவல்களைப் பெற நான்கு கருவிகள் மாத்திரமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவை 65,000 சதுர கிலோ மீற்றருக்குப் போதுமானவையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை சரியான கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போதே இந்த பூகம்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ஆராய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading