Local

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது!

நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக அரச தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தூதரக அதிகாரிகளுக்கு அது தொடர்பாக அழுத்தங்களை கொடுக்க முடியாது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ராஜாங்க அமைச்சர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லே கூறியிருந்தமை தொடர்பாக நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை இறையாண்மையுள்ள நாடு. மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாட்டின் அரச தலைவர்களே வழங்கினார்களே வெளியில் உள்ள தரப்பினருக்கு வழங்கவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading