Local

இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் கைது!

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாயக்கிழமை காலை 9.33 மணிக்கு FZ 537 இலக்க விமானத்தில் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு
கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீமை சுங்க அதிகாரிகள்   VIP  பகுதியில் வைத்து சோதனை செய்த போது அவரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 3.5 கிலோகிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading