Local

இலங்கையரை காப்பாற்ற முயன்ற நண்பருக்கு வழங்கப்படவுள்ள கௌரவம்!

பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் இலங்கை பிரஜையான பிரியந்த தியவதன ஏனைய ஊழியர்களினால் சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பிரியந்த தியவதனவை வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவரது நண்பரை கௌரவிக்க உள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரியந்தவை வன்முறை கும்பலிடமிருந்து காப்பாற்ற முயன்ற, அவருக்கு பாதுகாப்பளிக்க முயன்ற அவரது நண்பர் மலிக் அடானின் தார்மீக தைரியம் மற்றும் துணிச்சலிற்கு தேசத்தின் சார்பில் நான் தலைவணங்குகின்றேன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பிரியந்தவை காப்பாற்ற பல வழிகளில் தனது உயிரையும் பணயம் வைத்து போராடியமைக்காக அடானைதம்ஹா சுஜாட் விருதினை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading