Jobs

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் Huawei:   AI மற்றும் Pre Wi-Fi 8 வலையமைப்பு தீர்வுகள் அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 5G தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சியால் உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கையின் நிறுவன ரீதியிலான தரவுத் தொடர்பு (Datacom) வலையமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் ‘Huawei Intelligent IP Summit 2026’ அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், அரசுத் துறை, பெருநிறுவனங்கள், கல்வி, உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஒரு வலுவான வலையமைப்பு கட்டமைப்பு எவ்வளவு அவசியமானது என்பது வலியுறுத்தப்பட்டது. நவீன நிறுவனங்களுக்கு வெறும் இணைய வசதி மட்டும் போதுமானதல்ல மாறாக செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தரவு மையங்களின் தேவைகளைத் திறம்படக் கையாளக்கூடிய ஒருங்கிணைந்த மற்றும் பாதுகாப்பான நுண்ணறிவு வலையமைப்பு தளங்கள் அவசியம் என இம்மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் செயலிகள் மற்றும் நிகழ்நேர டிஜிட்டல் சேவைகள் இன்று முதன்மை பெற்று வரும் சூழலில், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு, நிறுவனங்கள் தங்களது வலையமைப்பு உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் மீள்தன்மை, அதிக செயல்திறன், பாதுகாப்பு மற்றும் புத்தாக்கமான சேவைகளை உறுதிப்படுத்த முடியும் என்பதே இம்மாநாட்டின் முக்கிய செய்தியாக அமைந்தது.

AI மற்றும் 5G: நிறுவன வலையமைப்புகளின் புதிய பரிமாணம்

இந்த மாநாட்டின் மற்றொரு முக்கிய கருப்பொருளாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் 5G தொழில்நுட்பங்கள் நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப சூழலில் ஏற்படுத்தும் புரட்சிகரமான மாற்றங்கள் அமைந்தன. இலங்கையில் 5G தொழில்நுட்பம் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், அதன் முழுமையான நன்மைகளைப் பெறுவதற்கு வலுவான ‘Datacom’ உட்கட்டமைப்பு மிகவும் அவசியமானது எனத் துறைசார் வல்லுநர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் மின்னணு அரசாங்கச் சேவைகள் முதல், ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் நுண்ணறிவுமிக்க ரியல் எஸ்டேட் மேம்பாடுகள் வரை, அனைத்துத் துறைகளிலும் இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், நிறுவனங்கள் உயர் செயல்திறன் கொண்ட, குறைந்த காலதாமத நிலை உடைய மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்குத் தயாரான வலையமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.

5G தொழில்நுட்பத்தின் ஆற்றலை, நிஜ உலக நிறுவனப் பயன்பாடுகளுடன் இணைக்கும் ஒரு முக்கிய பாலமாக ‘Datacom’ விளங்குவதாகவும், இது பாதுகாப்பான மற்றும் அளவிடக்கூடிய செயல்திறனை உறுதிப்படுத்துவதாகவும் Huawei நிறுவனம் இங்கு விளக்கமளித்தது.

தொலைத்தொடர்பு மற்றும் நிறுவன ரீதியிலான தீர்வுகளில் Huawei இன் ஆதிக்கம்

இம்மாநாட்டில் உரையாற்றிய Huawei ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, இலங்கையின் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், 5G தொழில்நுட்பத்தை நாடளாவிய ரீதியில் விஸ்தரிப்பதிலும் Huawei நிறுவனம் நீண்டகாலமாக வகித்து வரும் தலைமைத்துவப் பாத்திரத்தை மீள உறுதிப்படுத்தினார்.

இலங்கையின் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் Huawei நீண்டகாலமாக ஒரு நம்பிக்கைக்குரிய பங்காளராக இருந்து வருகிறது. நாடு தழுவிய ரீதியில் இணைப்பு வசதியை மேம்படுத்துவதிலும், உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து 5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதிலும் நாங்கள் முன்னணியில் இருந்து செயற்படுகிறோம்.

அதேவேளை, நிறுவன ரீதியான சந்தையிலும் எமது நிலையை நாங்கள் பலப்படுத்தி வருகிறோம். வங்கி மற்றும் நிதி, அரசு, பெருநிறுவனங்கள், கல்வி, உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுடன் நெருக்கமாக இணைந்து, பாதுகாப்பான, புத்திசாலித்தனமான மற்றும் எதிர்காலத்திற்குத் வலையமைப்பு தீர்வுகளை வழங்கி வருகின்றோம். என்றார்.

AI-தொழில்நுட்பத்திற்குத் தயாரான நிறுவனங்களுக்கான ‘ Datacom’ புத்தாக்கங்களை காட்சிப்படுத்தல்

இந்த மாநாட்டின் ஒரு சிறப்பம்சமாக, செயற்கை நுண்ணறிவு சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட Huawei இன் புதிய தரவுத் தொடர்பு (Datacom) தயாரிப்புத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் தங்களது வலையமைப்பில் 5G இணைப்பைத் தடையின்றி ஒருங்கிணைக்கவும், பாதுகாப்பான மற்றும் அதிவேகத் தரவுப் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும் உதவும் NetEngine AR 5G பாதுகாப்பான ரூட்டர்கள் (Secure Routers) இதில் முதன்மையானவை.

மேலும், வயர்லெஸ் வலையமைப்புகளின் வேகம் மற்றும் நம்பகத்தன்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, AI தொழில்நுட்பத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட AirEngine 8771-X1T (Pre-Wi-Fi 8) அணுக்கப் புள்ளிகளை (Access Points) Huawei அறிமுகம் செய்தது. அத்துடன், வங்கி அமைப்புகள் மற்றும் அரச உட்கட்டமைப்புகள் போன்ற மிக முக்கியமான சேவைகளுக்காக CloudEngine சுவிட்சுகள் (Twin Switches) அறிமுகப்படுத்தப்பட்டன. இவை எவ்விதத் தடையுமின்றி (Zero downtime) சேவைகளை வழங்குவதோடு, தொழில்நுட்பக் கோளாறுகளை மிக விரைவாகக் கண்டறிந்து சீர்செய்யும் திறன் கொண்டவை.

இந்த புத்தாக்கங்கள் மூலம், மீள்திறன் கொண்ட மற்றும் உயர் செயல்திறன் மிக்க நிறுவன வலையமைப்புகளை உருவாக்குவதே தமது நோக்கம் என்பதை Huawe நிறுவனம் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

தொழிற்துறை ஒத்துழைப்பும் அறிவுப் பகிர்வும்

இந்த மாநாட்டின் மற்றுமொரு சிறப்பம்சமாக, தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. டிஜிட்டல் மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு நிறுவனங்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த ஆலோசனைகள் இதில் முன்வைக்கப்பட்டன.

நிதிச் சேவைகள், பொதுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வலையமைப்புகள் மற்றும் 5G சேவைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை நிலையான முறையில் முன்னெடுத்துச் செல்லவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும், தொழில்துறை பங்குதாரர்களுக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு இன்றியமையாதது என்பது இக்கலந்துரையாடலின் முக்கிய முடிவாக அமைந்தது.

எதிர்காலத்திற்குத் தயாரான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நிறுவன ரீதியிலான ‘Datacom’ வலையமைப்புகள் உருவெடுத்துள்ளதை Huawei இன் ‘Intelligent IP Summit 2026’ மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தொழில்நுட்ப ரீதியில் இணைக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் நிலையில், AI மற்றும் 5G தொழில்நுட்பங்களுடன் மேம்பட்ட வலையமைப்பு உட்கட்டமைப்புகள் ஒன்றிணைவது மிக அவசியமானது.

இந்தத் தொழில்நுட்பப் புரட்சியானது இலங்கையின் வணிக ரீதியான மாற்றம், மேம்படுத்தப்பட்ட பொதுச் சேவை வழங்கல் மற்றும் ஒட்டுமொத்த தேசிய அபிவிருத்தி ஆகியவற்றில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இம்மாநாடு கோடிட்டுக் காட்டியுள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading