Local

இலங்கையில் அதிகபட்ச கொரோனா நோயாளிகள் இன்று பதிவானது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 696 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 94 வயதுடைய ஆண் ஒருவரும், பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், லெவ்ல பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், தென்னெகும்புர பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், மாலம்பே பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும், கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும், வரகாமுர பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இன்றைய தினம் 1,891 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 111,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 97,848 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading