Local

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (30) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,441 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் இரண்டு பெண்களும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பேரும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading