Local

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் என்ற போர்வையில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

வன்முறைச் செயல்கள் இடம்பெற்றால் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

அவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading