Local

இலங்கையில் இனி சர்வதேச தரத்தில் பிறப்புச்சான்றிதழ்

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை,  இவ்வருடம் மார்ச் மாதத்திலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் தெரிவித்துள்ளது.
   வெளிநாட்டுப்  பயணங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு மிகவும் அவசியமான ஒரு பிறப்புச் சான்றிதழாக இது அமையும் என்று, பதிவாளர் நாயகத்தின் திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.
   மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்டத்தின் கீழ்வரும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும்,  தற்சமயம் விநியோகிக்கப்பட்டுவரும் இப்பிறப்புச்சான்றிதழ்கள்,  சர்வதேச அங்கீகாரம் பெற்றவை அல்ல.
   நாடளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகையில், பதிவாளர் ஒருவரது அல்லது ஆணையாளர் ஒருவரது கையொப்பத்துடன் குறித்த புதிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading