Local

இலங்கையில் இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இலங்கையில் இன்று (13) 36 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,231 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு கட்டாரில் இருந்து 16 பேர், குவைத்தில் இருந்து 06, எத்தியோப்பியா 01 ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 10 மாலைதீவு 02 தாய்லாந்து 01 என நாடு திரும்பிய 36 பேருக்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 223 ஆக காணப்படுகிறது.

இதேவேளை இதுவரை 2,996பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading