Local

இலங்கையில் இராவணன் சீதையை மறைத்து வைத்த இடம்

இராவணன் சீதையை மறைத்து வைத்த இடங்களில் சீத்தா கொட்டுவையும் ஒன்றாக கருதப்படுகிறது.
கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கிய பயணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் நக்கிள்ஸ் மலைத்தொடரின் அழகை ரசித்தபடி சென்றால் மஹியங்கனையை அடைவதற்கு முன் சீத்தா கொட்டுவையை காணலாம்.
உட்செல்லும் இடத்தை இலகுவாக கண்டுபிடிக்க முடியாது. அருகிலிருப்பவர்களிடம் கேட்டுதான் செல்ல வேண்டும். ஒழுங்கற்ற காட்டுப் பாதையில் 30 – 45 நிமிட நடைபயணத்தின் முடிவில் இந்த இடத்தை அடையலாம்.
ரம்மியமாகவும் அமைதியாகவும் உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடையின் சத்தம் மனதை கவரும். சீதையை சிறைப்படுத்திய இடமெல்லாம் நீர்வளம் உள்ள இடமாகவே இருந்தது என சகோதர மொழி பேசும் உள்ளூர்வாசி கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading