Local

இலங்கையில் ஈரப்பலா ஒன்றின் விலை 300 ரூபா!

ஈரப்பலா ஒன்றின் விலை 300 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அம்பலாங்கொடை சந்தைக்கு சென்ற நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு உரங்களும் இன்றி இயற்கையாகவே வளரும் ஈரப்பலாவின் விலையும் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு நுகர்வோர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஈரப்பலா மாத்திரமன்றி அனைத்து பலா வகைகளின் விலைகளும் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1000-1200 ரூபா வரையில் விலை அதிகரித்துள்ளது. மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading