Local

இலங்கையில் ஊரடங்கை தளர்த்தியதன் விளைவு 14 நாட்களின் பின்னர் தெரியவரும்

இலங்கையில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவை 14 நாட்களின் எதிர்கொள்ளலாமென சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் 14 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கு காரணம் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் தளர்வே எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 11ம் திகதி தொடக்கம் 23 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்தப்பட்டிருப்பதுடன், இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படாமல் உள்ளது.

இதனால் உண்டாகும் சாதக, பாதகங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் உலகில் பல நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்படும்போது 2ம் அலையின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக சீனாவின் ஹகான் மாகாணத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் உணரப்பட்டிருக்கின்றது. எனவே இலங்கையிலும் அவ்வாறான ஆபத்துள்ளது.

குறிப்பாக சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க 2ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகவே தாக்கம் ஏற்படலாம் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள். மருத்துவர்களை பொறுத்தளவில் கட்டுப்பாடு தளர்வு ஆபத்தானது.
ஆனால் மருத்துவர்களின் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. காரணம் கொரோனா இடர்காலத்தில் வேறு பல பாதிப்புக்கள் உள்ளன. அதனடிப்படையிலேயே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் இதன் விளைவை உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாது. 14 நாட்களின் பின்பே உணர முடியும் எனவும் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading