Local

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் முக்கியமான பல நிதி மற்றும் பொதுச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரி செலுத்துவோர் TIN சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.

புதிய சட்டம்

புதிய சட்டத்தின்படி, நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு வங்கிக் கணக்கை ஆரம்பித்தல், கடன் அட்டைகளை பெற்றுக் கொள்ளுதல், காணிகளைப் பதிவு செய்தல் அல்லது காணி உரிமையை உறுதிப்படுத்துதல், கட்டடத் திட்டங்களுக்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல், மோட்டார் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல், புதிய வணிகங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை கைமாற்றுதல் (வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் இது பொருந்தும்) போன்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது செல்லுபடியாகும் TIN சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை | Tin Certificate Now Mandatory From April 1

வர்த்தமானி அறிவித்தலின்படி, வங்கி மேலாளர்கள், பதிவாளர்கள், மாகாண அல்லது பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அதிகாரிகள், தத்தமது சேவைகளை வழங்குவதற்கு முன் விண்ணப்பதாரரின் TIN சான்றிதழை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.

வரி செலுத்தும் முறையை முறைப்படுத்துவதற்காகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading