Lead NewsLocal

இலங்கையில் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் பொதுத்தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தமுடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எனவே, தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றது. பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவிவருவதால் பொதுத்தேர்தலை ஒத்திவைக்குமாறு பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading