Local

இலங்கையில் ஒன்லைன் வங்கிச்சேவை குறித்து அவசர எச்சரிக்கை

இலங்கையில் ஒன்லைன் வங்கிச் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயணவழிகாட்டிகளைப் படி

சர்வதேச மோசடிக் குழுக்கள் வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்களைத் திருடுவதற்கும், வங்கி கணக்குகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்கும் அதிநவீன ‘பிஷிங்’ (Phishing – தகவல் திருட்டு) தாக்குதல்கள் மற்றும் போலி வங்கி இணையதளங்களைப் பயன்படுத்தி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கி சேவைகளுக்காக மேலதிக பாதுகாப்பு 

இதனை தடுக்கும் நோக்கில் இலங்கையின் ஒன்லைன் வங்கிச் சேவைகளுக்காக மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரஷாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒன்லைன் வங்கிச்சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Online Banking Customers Warned About Phishing

கடந்த ஆண்டில் நாட்டின் டிஜிட்டல் நிதித் துறையைக் குறிவைத்து நடத்தப்படும் சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், வங்கி வாடிக்கையாளர்களை இலக்கு வைக்க மோசடி செய்பவர்கள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் உள்நுழைவு விபரங்களைக் கண்டறிவதற்காக பிஷிங் தாக்குதல்கள் மற்றும் போலி வங்கி இணையப் பக்கங்கள் பயன்படுத்தப்படுவதால், வங்கிக் கணக்குகளுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அபாயம் அதிகரித்துள்ளது. இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாக்கவும் வங்கிகள் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

புதிய பாதுகாப்பு முறைகள்

பதிவு செய்யப்பட்ட அல்லது நம்பகமான இணைய உலாவிகளுக்கு மட்டுமே ஆன்லைன் வங்கிச் சேவைக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கூடுதல் அங்கீகார படிகளை அறிமுகப்படுத்துதல் போன்ற புதிய பாதுகாப்பு முறைகள் ஆரம்பத்தில் சில வாடிக்கையாளர்களுக்கு சிரமமாகத் தோன்றலாம் என திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் ஒன்லைன் வங்கிச்சேவை குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Online Banking Customers Warned About Phishing

எனினும், தானியங்கி சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இவ்வாறான கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் அத்தியாவசியமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கூடுதல் பாதுகாப்பு அடுக்குகள் தானியங்கி ‘சர்க்யூட் பிரேக்கர்’ போன்று தொழிற்பட்டு, மோசடி செய்பவர்கள் கணக்கைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து பணத்தைப் பெறுவதற்கு முன்பாகவே அவர்களின் போலி அணுகல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அதிக வசதியையும் பாதுகாப்பையும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் உத்தியோகபூர்வ மொபைல் வங்கிச் செயலிகளைப் பயன்படுத்துமாறும், உறுதிப்படுத்தப்படாத இணைப்புகள் அல்லது இணையதளங்கள் மூலம் வங்கிச் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தியோகபூர்வ மொபைல் வங்கிச் செயலிகளை அணுகும்போது முக அடையாளம் மற்றும் கைரேகை சரிபார்ப்பு போன்ற உயிரியல் அளவீட்டு பாதுகாப்பு முறைகள் கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலம் போலி வங்கி இணையதளங்கள் மற்றும் போலிப் பிரசாரங்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் தமது வங்கிகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, உத்தியோகபூர்வ வங்கிச் செயலிகளை மட்டுமே பயன்படுத்துமாறும், வங்கிக் கணக்கு விபரங்களைக் கோரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading