இலங்கையில் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்!

விவசாயத்துக்கு தேவையான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“ஸ்கை நியூஸ்’ செய்திச் சேவைக்கு வழங் கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை எனவும், இதனால் நெல்சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது எனவும் அவர் கவலை தெரிவித்தள்ளார். எனவே ஓகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மேலும், இந்த நேரத்தில் உலக ளாவிய உணவு நெருக்கடியும் ஏற்
பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு கடந்த நிர்வாகமே காரணம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
