Local

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மாணிக்கக்கல்லின் விலை 2 ஆயிரம் கோடி ரூபா!

ஆசியாவின் ராணி என அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய மாணிக்கக்கல் கொத்தணியானது இரண்டாயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய டுபாயைச் சேர்ந்த நிறுவனமொன்றே இவ்வாறு குறித்த மாணிக்கக்கல் கொத்தணியை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதனை 100 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்ய குறித்த நிறுவனம் விருப்பத்தை முன்வைத்துள்ளது.

இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் கொத்தணியானது பலாங்கொடை பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading