Local

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட் மர்ம குகைகள்!

இலங்கையில் உள்ள பகுதி ஒன்றில் இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு சுரங்கப் பாதைகளும் தெனியாய − விஹாரஹேன பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக வீதியின் இரு பகுதியிலும் உள்ள மண்மேடுகளை வெட்டியவேளை அடாரதெனிய முச்சந்தியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இரு சுரங்கப் பாதைகளும் ஒரே இடத்தில் ஆரம்பமாகும் அதேவேளை, சுரங்கப் பாதை ஆரம்பமாகும் இடத்தில் வீடுகள் கிடையாது என தெரிய வருகின்றது. இருப்பினும், சுரங்கப் பாதை பயணிக்கும் திசையில் வீடுகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதைகள் எந்த காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டவை? இல்லையெனில் இயற்கையாகவே உருவானதா? என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், இந்த சுரங்கப் பாதை தொடர்பாக ஆய்வுகளை நடத்த இதுவரை எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை என அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading