Local

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஔியியல் மாயையுடன் கூடிய வீதி!

இலங்கையில் முதன்முறையாக, ஒளியியல் மாயையுடன் கூடிய வீதிப் பகுதியைக் கண்டுபிடிப்பதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்  அதுல சேனாரத்ன வெற்றி பெற்றுள்ளார்.

நாவுல – எலஹெர பிரதான வீதியில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த வீதிப் பகுதி காணப்படுகிறது.

இது தொடர்பில் முன்னாள் இராணுவ கேணல்  ரத்னபிரிய பந்து காணொளி மூலம் பேராசிரியைக்கு தெரியப்படுத்தியதுடன், இன்று (01) காலை அவ்விடத்தை பார்வையிட வந்த பேராசிரியர், இலங்கையில் இவ்வாறானதொரு இடம் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும், வேறு பல நாடுகளில் இதுபோன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த இடம் பார்ப்பதற்கு மேடு போல் இருந்தாலும், உண்மையில் இது ஒரு பள்ளத்தாக்கு என்று பேராசிரியர் விளக்கினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading