Local

இலங்கையில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று(12) தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,877 இலிருந்து 1,880 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், விடத்தல்பளையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் ஆகிய கடற்படையைச் சேர்ந்த 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம்(12) கொரோனா தொற்றுக்குள்ளான 03பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 46 பேர் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,879 பேரில் தற்போது 673 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 1,196 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 57 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading