Local

இலங்கையில் கொரோனா தொற்று ஒரு இலட்சத்தை தாண்டியது!

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் 

இன்றைய தினம் புதிதாக மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய நாட்டில் இதுவரை 100,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,155 ஆகும். 

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading