Local

இலங்கையில் கொரோனா வைரஸை இரண்டாவது மரணம் பதிவானது

இலங்கையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த 66 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

‘கொரோனா’ வைரஸ் தொற்றால் இலங்கையில் பதிவாகும் இரண்டாவது மரணம் இதுவாகும்.

‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் ஏற்கனவே 60 வயதுடைய நபரொருவர் கடந்த (24) உயிரிழந்துள்ளார்.

‘கொரோனா’ தொற்றுக்கு இலக்காகி அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மஹரவில பகுதியை சேர்ந்த ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

குறித்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ளார் என்பதுடன், உயர்குருதி அழுத்தம் மற்றும் சக்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று மாலை இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading