Lead NewsLocal

இலங்கையில் கொரோனா வைரஸ் முதல் மரணம் பதிவானது

இலங்கையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 60 வயதுடைய நபரொருவர் இன்றிரவு (28) உயிரிழந்துள்ளார்.

‘கொரோனா’ தொற்றுக்கு இலக்காகி அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மஹரவில பகுதியை சேர்ந்த ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ளார் என்பதுடன், உயர்குருதி அழுத்தம் மற்றும் சக்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

‘கொரோனா’ வைரஸால் இலங்கையில் பதிவான முதல் மரணம் இதுவாகும்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading