Lead News

இலங்கையில் கொரோனா வைரஸ்?

இலங்கையிலும் ‘கொரோனா’ வைரஸ்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

‘கொரோனோ’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேககிக்கப்படும் பெண்கள் இருவர் அங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கல்விபயின்ற இலங்கையை சேர்ந்த மாணவியொருவரும், இலங்கைக்கு சுற்றுல்லாப் பயணம் மேற்கொண்ட சீன நாட்டு பெண்ணொருவருமே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் இவர்களுக்கு விசேட பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. இருவரும் ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்காகியா நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

அதேவேளை, கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுப்பதற்காக அனைத்துவித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.

விமான நிலையத்தில் விசேட சுகாதாரப்பிரிவொன்றுகூட ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சீனாவிலுள்ள இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகமும் விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவிவரும் நிலையில் குறைந்தபட்சம் 41பேர்வரையில் பலியாகியுள்ளனர். ஏனைய நாடுகளுக்கும் வைரஸ் வேகமாக பரவிவருகின்றது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading