Local

இலங்கையில் கொரோனா 2 ஆம் அலையில் 209 பேர் பலி!

இந்நாட்டில் பதிவான 70 வயதிற்கு மேற்பட்ட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 222 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 209 பேர் இரண்டாம் அலை ஆரம்பான ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதிக்கு பின்னர் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

61 வயதிற்கும் 70 வயதிற்கும் இடைப்பட்ட 43 பேரும், 51 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட 34 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 641 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட 21 மரணங்களும், 31 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட 5 மரணங்களும் மற்றும் 10 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட 4 மரணங்களும் இதுவரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 9 வயதிற்கு குறைந்த ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading