Local

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையை நோக்கி வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் 84,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்தே அதிகளவானவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஜூன் மாதத்தின் 26 ஆம் திகதி வரையில் இந்தியாவில் இருந்து 22,388 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,08,489 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading