Local

இலங்கையில் ஜுன் 15ற்கு பின்னர் எரிபொருள் காணப்படாது!

ஜூன் 15ஆம் திகதிக்குப் பின்னர், இந்தியக் கடன் வசதி நிறைவடைந்தவுடன், நாட்டுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியக் கடன் வசதியினால், குறைந்த எரிபொருள் வரிசைகளை நாடு கண்டுள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இம்மாதம் 15ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருளை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தை கடந்துள்ள போதிலும் அரசாங்கம் இன்னும் திட்டத்தை முன்வைக்கவோ, கலந்துரையாடவோ அல்லது நிரந்தர தீர்வை வழங்கவோ இல்லை எனக் கூறினார்.

எரிவாயுவுக்கான வரிசைகள் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாளாந்தம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading