Local

இலங்கையில் நாளை முதல் 21 மாவட்டங்களும் திறக்கப்படும்

கொரோனா பரவலால் முடங்கியுள்ள மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக, நாட்டை ஓரளவுக்கு திறந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதனடிப்படையில், நாளை முதல் 21 மாவட்டங்களும் திறக்கப்படும்.

இதேவேளை ஒன்றரை மாதங்களுக்கு பின்னர், மேல்மாகாண மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது.
இதேவேளை வரையறைகள் தளர்த்தப்படும் போது கொரோனா நோயாளர்கள் சிக்குவார்களாயின், அந்தப் பிரதேசத்துக்கு மட்டுமே ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அவ்வாறான பிரதேசங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருப்பவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், தற்போது அமுலில் இருக்கும் இரவு 8 மணிமுதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு சட்டத்தையும் ஏனைய மாவட்டங்களில் முற்றாக தளர்த்தி விடுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading