Local

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் அல்லது துபாயில் நடத்தலாமா?

இந்தியாவில் நடத்தப்படும் 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாடுகளில் போட்டியை நடத்தலாமா என்று பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகும் வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்ட பிசிசிஐ”  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாலும், ஊரடங்கு உத்தரவு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாலும், அடுத்த அறிவிப்பு வரும் வரை 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுகின்றன. கிரிக்கெட் போட்டியை விடத் தேசத்தின் பாதுகாப்பும் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்தினர் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம்  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐ-க்கு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியதாவது:  ஐபிஎல் போட்டிகளை நடத்த இலங்கையும் ,ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது என்றார். மேலும் தொடர்ந்த அவர்  கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் உடல் நலனும் இப்போது முக்கியம். இப்போது உலகமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது, எனவே இப்போது எந்த முடிவையும் எங்களால் எடுக்க முடியது  என்று அருண் துமால் கூறியுள்ளார். ஏற்கெனவே 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் தொடரின் 20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading