இலங்கையில் நிலநடுக்கம்!
இலங்கை அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் புவிச்சரிதவியல் ஆய்வு பணியகம் கூறியுள்ளது.
அனுராதபுரத்திலிருந்து கிழக்கே 41 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது
இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ள போதிலும் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்படாது எனவும் புவிச்சரிதவியல் ஆய்வு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
