இலங்கையில் நீரழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் இன்று நீரிழிவு நோயின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
புள்ளிவிவரங்களின்படி, 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு (Diabetes) என்னும் நிலை உருவாகி, ஒட்டுமொத்த சனத்தொகையில் சுமார் 4.3 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்பெல்லாம் வயதானவர்களை மட்டுமே தாக்கிய இந்த நிலை, இன்று துரதிர்ஷ்டவசமாக இளையோரையும் அதிகளவில் பாதித்து வருகிறது.
இது நம் எதிர்காலச் சமுதாயத்திற்கே ஒரு பெரும் ஆபத்தாகும்.
முதலில் நாம் நீரிழிவு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நீரிழிவு (Type 2 Diabetes) என்பது ஒரு பரம்பரை நோயோ அல்லது குணப்படுத்த முடியாத ஒரு கொடிய வியாதியோ அல்ல; அது ஒரு “Metabolic Syndrome” (வளர்சிதை மாற்றக் குறைபாடு).
நம்முடைய தவறான உணவுப் பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மற்றும் மனஅழுத்தம் (Stress) ஆகியவற்றால் நாமே தேடிக்கொண்ட ஒரு குறைபாடுதான் இது.
நாம் உண்ணும் உணவைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே நீரிழிவுக்கு முதன்மைக் காரணம்.
இலங்கையில் , உணவுப்பழக்க வழக்கங்கள் சம்மந்தமான போதிய அறிவு இல்லாத காரணத்தினாலும் , physical activities இல்லாத காரணத்தினாலும் , stress management களில் நாட்டம் இல்லாத காரணத்தினாலும் நீரிழிவு நோயானது மிகவும் பெருகிக்கொண்டே வருகிறது.
முறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் (Lifestyle Changes) மூலம் இதை நிச்சயமாகக் கட்டுப்படுத்தவும், முழுமையாக மாற்றி அமைக்கவும் (Reverse) முடியும்.
நாம் ஏன் மாத்திரைகளை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள, நம் உடலில் Insulin Resistance எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.
இந்த Insulin Resistance (இன்சுலின் எதிர்ப்புத் திறன்) எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.
நமது செரிமான மண்டலம்( Digestive system) என்பது ஒரு தொழிற்சாலை போன்றது.
நாம் உண்ணும் உணவு எரிபொருளாக (Glucose) மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. ஆனால், நாம் எந்த வகையான எரிபொருளைக் கொடுக்கிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.
வெள்ளை அரிசி, மைதா (கோதுமை மா), வெள்ளைச் சீனி மற்றும் பாக்கெட் உணவுகள் போன்றவற்றைத் தயாரிக்கும் போது, தானியங்களில் உள்ள தவிடு (Bran) மற்றும் முளைக்கரு (Germ) ஆகியவை நீக்கப்பட்டு விடுகின்றன.
இதனால் அவற்றில் உள்ள அத்தியாவசிய நார்ச்சத்தும் (Fiber) நுண்ணூட்டச்சத்துக்களும் முற்றிலுமாக அழிந்துவிடுகின்றன.
நார்ச்சத்தே ( fibre)இல்லாத இந்த உணவுகள் வயிற்றுக்குள் சென்றவுடன், Digestive system ற்கு எந்த வேலையும் வைப்பதில்லை. அவை மிக எளிதாக, சாப்பிட்ட 15 முதல் 30 நிமிடங்களுக்குள் முழுமையாகக் கரைந்து, ஒரே நேரத்தில் ஒரு பெரும் வெள்ளம் போல இரத்தத்தில் குளுக்கோஸாகக் கலக்கின்றன.
நாம் காலையில் பரோட்டா அல்லது வெள்ளைச் சோறு, மதியம் பிரியாணி அல்லது வெள்ளை அரிசிச் சாதம், மாலையில் பிஸ்கட் அல்லது டீ, இரவில் மீண்டும் தோசை அல்லது புரோட்டா எனத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்தையே சாப்பிடும்போது, நம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரு நாளும் கீழே இறங்குவதே இல்லை. அது எப்போதும் ஆபத்தான உச்சியிலேயே (Chronic Spikes) நீடிக்கிறது.
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேல் அதிகரிப்பது உடலுக்கு ஆபத்தானது.
அது இரத்த நாளங்களையும், நரம்புகளையும் சேதப்படுத்தும். எனவே, உடல் உடனடியாக ஒரு அவசரகால நடவடிக்கையில் இறங்குகிறது.
இரத்தத்தில் சர்க்கரை வெள்ளம் போலப் பாய்ந்ததும், கணையத்தில்( pancreas ) உள்ள பீட்டா செல்கள் (Beta Cells) தூண்டப்பட்டு, மிக அதிகளவிலான இன்சுலின் (Insulin) ஹார்மோனை அவசர அவசரமாக இரத்தத்தில் சுரந்து விடுகின்றன.
இங்கு தான் இன்சுலினின் தன்னுடைய வேலை என்னவென்பதை காட்டுகிறது.
இன்சுலின் என்பது ஒரு “திறவுகோல்” (Key) போன்றது. இரத்தத்தில் மிதக்கும் குளுக்கோஸ் தானாகச் செல்களுக்குள் நுழைந்துவிட முடியாது.
இன்சுலின் சென்று செல்களின் கதவைத் திறந்தால் மட்டுமே, குளுக்கோஸ் உள்ளே சென்று ஆற்றலாக (Energy) மாற முடியும்.
நாம் சாப்பிடும் ultra refined /ultra processed உணவுகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, கணையம் சாதாரண அளவை விட 5 முதல் 10 மடங்கு வரை அதிக இன்சுலினைச் சுரக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறது.
இதுதான் நீரிழிவு நோயின் மிக முக்கியப் திருப்புமுனை. இதை ஒரு எளிய நிஜ வாழ்க்கைக் கதை மூலம் புரிந்து கொள்ளலாம்.
உங்கள் வீட்டு வாசலில் ஒரு நிமிடம் ஒருவன் வந்து மணியடித்தால் (Doorbell), நீங்கள் கதவைத் திறந்து வரவேற்பீர்கள்.
அதுவே ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், நூற்றுக்கணக்கானவர்கள் வந்து உங்கள் வீட்டு வாசலில் இடைவிடாது பெல் அடித்துக் கொண்டே இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சத்தம் தாங்க முடியாமல் கோபமடைந்து, காதுகளில் பஞ்சை வைத்துக் கொண்டு, வீட்டின் பிரதான கதவைப் பூட்டி, உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்வீர்கள் அல்லவா?
நம் உடலின் செல்களும் (தசைகள், கல்லீரல் செல்கள்) இதைத்தான் செய்கின்றன:
நாம் அடிக்கடி சாப்பிடுவதாலும், Ultra-processed உணவுகளை உண்பதாலும், இரத்தத்தில் இன்சுலின் என்னும் திறவுகோல் எந்நேரமும் செல்களின் கதவைத் தட்டிக் கொண்டே (Spike) இருக்கிறது.
இந்த தொடர் அழுத்தத்தால் சோர்வடையும் செல்கள், தங்களின் மேல் உள்ள Insulin Receptors ( பூட்டுகள்) மெல்ல மெல்ல மழுங்கச் செய்து விடுகின்றன.
அதாவது, இன்சுலின் வந்து கதவைத் தட்டினாலும், செல்கள் தங்களின் கதவைத் திறக்க மறுத்து விடுகின்றன. இதையே மருத்துவம் Insulin Resistance (இன்சுலின் எதிர்ப்புத் திறன்) என்கிறது.
இப்போது இரத்தத்தில் சர்க்கரையும் இருக்கிறது, இன்சுலினும் இருக்கிறது. ஆனால், கதவு திறக்காததால் சர்க்கரையால் செல்களுக்குள் போக முடிவதில்லை. இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காமல், நாம் சாப்பிட்ட பின்பும் உடல் சோர்வாகவே (Fatigue) இருக்கும்.
செல்கள் கதவை மூடிவிட்டதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவும், இன்சுலினின் அளவும் மிக அபாயகரமாக உயர்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் உடலைக் காப்பாற்ற கல்லீரல் (Liver) களம் இறங்குகிறது.
இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த அதிகப்படியான சர்க்கரையைத் துடைத்து எடுக்க, கல்லீரல் அந்த குளுக்கோஸை உறிஞ்சி, அதை உடனடியாக Triglycerides மற்றும் கொழுப்பு அமிலங்களாக (Fatty Acids) மாற்றத் தொடங்குகிறது.
இந்த செயல்முறைக்கு அறிவியல் ரீதியாக Lipogenesis என்று பெயர்.
இவ்வாறு உருவாக்கப்படும் கொழுப்பு முதலில் கல்லீரலிலேயே தங்குகிறது. இதனால் Fattly Liver (கல்லீரல் கொழுப்பு) நோய் ஏற்படுகிறது.
அதன் பிறகும் கட்டுப்பாடு இல்லலாமல் கண டதையும் சாப்பிட்டு சர்க்கரை அதிகரித்தால், அது வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நச்சுக் கொழுப்பாக (Visceral Fat – தொப்பை) சேமிக்கப்படுகிறது.
இந்த visceral fat அதிகரிக்க அதிகரிக்க, இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) இன்னும் மோசமாகிறது.
கணையம் இன்னும் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் சோர்வடைந்து (Beta Cell Burnout), இன்சுலின் சுரப்பதையே நிறுத்திவிடும் அல்லது குறைத்துவிடும்.
இந்த நான்கு நிலைகளின் இறுதிப் புள்ளிதான், மருத்துவர்கள் நமக்குக் கொடுக்கும் “Type 2 Diabetes” (நீரிழிவு நோய்) என்ற சான்றிதழ்!
ஆகவே உங்களது உயிரைப் பறிக்கும் எதிரிகள் உங்கள் சமையலறையிலே உள்ளனர் .
உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை இன்றே மூளையில் “ஆபத்தானது” என்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்:
1. பட்டை தீட்டப்பட்ட கோதுமை மா / வெள்ளை அரிசி (Refined Carbs)
2. வெள்ளை சீனி (Refined Sugar)
3. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் (Refined / Hydrogenated Oils)
இவை மூன்றும் நம் இரத்த சர்க்கரையை மிக வேகமாக உயர்த்தி, இன்சுலின் எதிர்ப்பை (Insulin Resistance) தீவிரமாக்குகின்றன.
இதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது?
அதற்கு முன்னர் நம் உடல் பற்றிய சில உண்மைகளை அறிந்திருத்தல் வேண்டும் .
நமது உடல் தன்னைத்தானே பழுதுபார்த்து, புதுப்பித்துக் கொள்ளும் (Self-healing) ஒரு பேராற்றல் வாய்ந்த இயற்கை இயந்திரம் ஆகும்.
நாம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்போது, உடலின் ஆற்றல் முழுவதும் Digestion பணிக்கே செலவாகிறது.
ஆனால், நாம் உண்பதை நிறுத்தி விரதம் (Fasting) இருக்கும்போது மட்டுமே, உடலுக்குத் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பு கிடைக்கிறது.
இதற்கு எந்தவித மாத்திரைகளோ அல்லது மருத்துவப் பரிந்துரைகளோ தேவையில்லை; இது முற்றிலும் இயற்கையான ஒரு உயிரியல் செயல்முறை (Natural Biological Process) ஆகும்.
விரதத்தின் போது உடலில் இன்சுலின் ஹார்மோனின் அளவு கணிசமாகக் குறைகிறது. இன்சுலின் குறைந்த உடனே, உடல் சர்க்கரையை எரிப்பதை நிறுத்திவிட்டு, தேவையற்ற கொழுப்புகளை எரிக்கும் நிலைக்குச் (Fat-burning mode) சுலபமாக மாறுகிறது.
இந்த நேரத்தில், உடல் முதலில் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குளுக்கோஸைப் (Glycogen) பயன்படுத்தி முடித்துவிட்டு, அதன் பிறகு தொப்பையிலும் உடலின் பிற பகுதிகளிலும் தேங்கியுள்ள நச்சுக் கொழுப்பைக் கரைத்து ஆற்றலாக மாற்றுகிறது.
இதுவே எந்தவித பக்கவிளைவும் இல்லாத ஆரோக்கியமான உடல் எடை குறைப்பிற்கு (Weight Loss) வழிவகுக்கிறது.
மேலும், விரதக் காலத்தில் உடலில் Autophagy என்னும் அற்புதமான சுய-சுத்திகரிப்புப் பணி தொடங்குகிறது.
இந்தச் செயல்முறையின் போது, உடலில் உள்ள பழைய புரதங்கள், Inflammationஐ உண்டாக்கும் நச்சுக் கழிவுகள் மற்றும் பழுதடைந்த செல்களை உடல் தானே கண்டறிந்து அழித்து, அவற்றை நல்ல செல்களாக மறுசுழற்சி (Recycle) செய்கிறது.
இது உடலின் வயதாகும் தன்மையைத் தடுத்து, இளமையைப் பாதுகாக்கும் (Anti-aging) ஒரு இயற்கை மருத்துவமாகும்.
உணவுக் கட்டுப்பாடு மற்றும் விரதத்தோடு உடற்பயிற்சியும் இணையும் போதுதான் Insulin resistance ஐ மிக வேகமாக உடைக்க முடியும்.
நாம் உடற்பயிற்சி செய்யும்போது (வேகமாக brisk walk , Jogging , Resistance training ), நம் தசைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அப்போது தசைகள், இன்சுலின் ஹார்மோனின் உதவி இல்லாமலேயே இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை நேரடியாக இழுத்து எரித்து விடுகின்றன.
உடற்பயிற்சி செய்வதன் மூலம், மூடிக் கிடந்த செல்களின் கதவுகள் திறந்து, இன்சுலினைச் சரியாக ஏற்கும் திறனை மீண்டும் பெறுகின்றன.
இதனால் insulin sensitivity அதிகரிக்கிறது.
அத்துடன் தினசரி உடற்பயிற்சி செய்வதால் கல்லீரலில் தேங்கியுள்ள visceral fat கொழுப்பைக் கரைத்து, நீரிழிவின் மூல காரணத்தை வேரறுக்கிறது.
Fatty liver disease ல் இருந்து விடுதலை கிடைக்கிறது.
தமிழர்களே….இப்பொழுதாவது புரிகிறதா உங்கள் தொப்பைக்கான காரணம்?
இருப்பினும் தற்கால மருத்துவ உலகம் நீரிழிவிற்கு மாத்திரைகள் மூலமான தீர்வுகளை வழங்குவதிலேயே முன் நிற்கின்றன.
நவீன மருத்துவ உலகம் இன்று அவசர கால சிகிச்சைகளுக்கும், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல வணிகமயமாக்கப்பட்ட மருத்துவ முறைகளில், நோய்க்கான மூல காரணத்தை (Root Cause) சரிசெய்வதை விட, மாத்திரைகள் மூலம் அறிகுறிகளைக் ( symptoms)ஐ கட்டுப்படுத்துவதற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
மாத்திரைகள் தற்காலிகமாக சர்க்கரையைக் கட்டுப்படுத்துமே தவிர, இன்சுலின் எதிர்ப்பை குணப்படுத்தாது.
உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் வெறும் மாத்திரைகளை மட்டும் நம்பியிருக்காமல், தங்களுடைய உணவுப் பழக்கம் (Diet), உடற்பயிற்சி (Exercise), முறையான உறக்கம், மற்றும் மனஅழுத்த மேலாண்மை (Stress Management) மூலம் நீரிழிவை வெற்றிகரமாக Reverse (முழுமையாகக் குணமாக்கல்) செய்திருக்கிறார்கள்.
என்னுடைய வேண்டுகோள் , நீங்களும் அந்தப் பாதையிலேயே பயணிக்க வேண்டும் என்பதே.
“கடவுள் நம் உடலை சுய-புதுப்பித்தல் அறிவுத் திறனுடன் (Repair Intelligence) படைத்துள்ளார். அதை நாம் முறையற்ற வாழ்க்கை முறையால் கெடுத்துக் கொள்கிறோம்.”
நீரிழிவுடன் வந்த பின் போராடுவதை விட வரமுன் காப்பதே புத்திசாலித்தனம்.
நமது முன்னோர்கள் அன்றே உணவின் முக்கியத்துவத்தை அழகாகக் கூறினார்கள்:
“ஒரு முறை உண்பான் யோகி,
இரு முறை உண்பான் போகி,
மூன்று முறை உண்டால் அவன் ரோகி,”
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
நீரிழிவு என்பது அனைத்து நோய்களின் வேர்” (Root of all diseases) என்று சும்மா ஒன்றும் சொல்லவில்லை.
உணவை மருந்தாக்குங்கள், இல்லையெனில் மருந்தையே உணவாக்க வேண்டியிருக்கும்!

You must be logged in to post a comment.