Local

இலங்கையில் நேற்று பதிவான பதிவுகள்!

இலங்கையில் நேற்று முதல் முறையாக 865 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது.
கொழும்பில் மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

நாடு முழுவதும் வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே, ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
……
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுகத்திலுள்ள ஏனைய மீனவர்களுக்கு இன்று பீசீஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
…….

கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகள் 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா நோயாளர்கள் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டமையால், 45 அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
……
நாட்டில் இதுவரை 4 லட்சத்து 15ஆயிரம் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
…..
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் அனைத்து கிளைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading