Local

இலங்கையில் பட்டம் பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை!

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் பட்டங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்வது தொடர்பில் கல்வி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக உபவேந்தர்கள் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அதிகப்படுத்தி மாணவர்களுக்கு பட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.

அவ்வாறான முயற்சிகள் மூலம் புதிய வெளிநாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தவும், அவற்றை வலுப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் தற்போதைய நெருக்கடி நிலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் உயர் கல்விக்கான எதிர்கால வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading