Local

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம்?

இலங்கையில் கோவிட் தொற்றினால் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

மாறாக தற்போதைய அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கோவிட் -19 தொற்றுநோயால் ஆசிய பிராந்தியத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரே நாடு இலங்கை ஆகும் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றுநோய்களின் போது இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தையும் வெளிநாட்டு இருப்புக்களையும் நிர்வகித்ததாக குறிப்பிட்ட அவர், எனினும் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 50 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த இரண்டு தேர்தல்களின் போது ஆதரவளித்த தொழிலதிபர்களுக்கு ஆதரவாக தற்போதைய அரசாங்கம் வட் வரியை குறைத்துள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு பெரும் வருமானம் குறைவு ஏற்பட்டுள்ளது.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பங்களிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading