Local

இலங்கையில் மக்கள் பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய்!

வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறான கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவித்தார்.

பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் சந்தைக்கு வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading