LocalUncategorized

இலங்கையில் முதல்முறையாக கொரோனா எதிர்ப்பு முக கவசம் தயாரிப்பு!

இலங்கையில் முதல்முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை பேராதனைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு தயாரித்துள்ளது.

ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களாலான முகக்கவசம் ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகக்கவசம் மூன்று வடிப்பான்களைக் கொண்டுள்ளது. குறித்த முகக்கவசத்தை 20 முறை பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மாதத்திற்குக் கழுவாமல் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு குறித்த முகக்கவசம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading