Local

இலங்கையில் மூன்று மாதங்களுக்குள் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் விநியோகம்!

ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 278,117 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண சேவை, ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிக் கட்டுப்பாட்டு ஊடக பேச்சாளர் ஹன்சிக்கா குமாரசிங்கவிடம் வினவிய போது, தெரிவித்தார்.

இதேவேளை, கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் காணாமல் போகுமாயின் அதற்காக 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் காணாமல் போனால் அதற்காக 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading